April 27, 2024

சூடுபிடிக்கும் இலங்கை அரசியல்..தொடங்கியது பனிப்போர்

இரட்டை குடியுரிமை கொண்டவர் நாடாளுமன்ற உறுப்பினராகுவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தடை நீக்கப்பட்டுள்ளமை அரசாங்கத்தில் தற்போது மாறுப்பட்ட நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இரட்டை குடியுரிமை கொண்ட நபர் அரச உயர் பதவிகளை வகிப்பதால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தின் ஊடாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இரட்டை குடியுரிமை கொண்டவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் ஏற்படுத்தப்பட்ட தடை அரசியலமைப்பின் 20ஆவது திருத்த மூல வரைபில் நீக்கப்பட்டமை எதிர்ப்புக்குரியது.

20ஆவது திருத்தத்தில் பல விடயங்கள் சாதகமாக காணப்பட்டாலும். இரட்டை குடியுரிமை உள்ளவருக்கு சாதகமாக ஏற்பாடுகள் ஏற்படுத்தியுள்ளமை தவறான தீர்மானமாகும் என்றுநும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.