April 27, 2024

கோட்டபாயவை தொலைபேசியில் அழைத்து தமிழர் குறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டி.எஸ்பருக்கும், இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் நேற்று இடம்பெற்றதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதன் போது, ​​கோவிட் 19 தொற்றுநோயை வெற்றிகரமாக கையாண்டமை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் சமீபத்திய முடிவுக்கு ஜனாதிபதியை, மார்க் டி.எஸ்பர் வாழ்த்தினார், மேலும் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் குறித்த தொடர்ச்சியான முன்னேற்றத்தை வலியுறுத்தினார் அவர். இதன் போது தமிழர்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அனைத்து நாடுகளின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் திட்டம் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. இலங்கை சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் சென்று கொண்டு இருப்பதை, அமெரிக்கா விரும்பவில்லை என்பதனை அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார். இதனை நாம் ஒரு எச்சரிக்கையாக கூட எடுத்துக் கொள்ளலாம்.