April 28, 2024

ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் – கமல்ஹாசன்

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு மழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நேற்று நள்ளிரவு முதல் பொது முடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இதையடுத்து, கடந்த 29ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் ஊரடங்கு தளர்வுக்கான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது. இதனடிப்படையில், தமிழகத்தில் புதிய தளர்வுகளை நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, மாவட்டங்களுக்கு இடையேயான இ.பாஸ் நடைமுறையை ரத்து, மாவட்டத்திற்குள்ளான பொது, தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி, தமிழகம் முழுவதும் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் திறக்கலாம் உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும் போது, நம் உயிருக்கும் உறவுகளுக்கும் நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது. மருந்தே இல்லாத இந்நோயில் இருந்து, நம் வாழ்முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே, நமைக் காத்திடும். #நாமேதீர்வு,” எனத் தெரிவித்துள்ளார்