April 28, 2024

அப்பாவி இளைஞர்களிற்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய பிணையை தடுத்து நிறுத்திய சுமந்திரன்

அப்பாவி இளைஞர்களிற்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய பிணையை தடுத்து நிறுத்திய சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடந்தது.

அதன்போது கட்சியின் பொதுச் செயலாளர் விவகாரம் மற்றும் தேர்தலிகளின் பின்னடைவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

தேசியப்பட்டியல் விவகாரம் விவாதிக்கப் பட்டது அப்போது ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கூட்டாக இணைந்து தேசியப்பட்டியல் வழங்கும் போது கையாளப்பட்ட மறை தவறே அன்றி தெரிவு செய்யப்பட்ட மாவட்டமோ மற்றும் தெரிவு செய்யப்பட்ட தேசியப்பட்டடியல் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனோ சிக்கலுக்குரிய தல்ல என மத்திய செயற்குழுவின் சார்பில் தமது கருத்தை பதிவு செய்தனர்.

அதன் பின்னர் தொடர்ச்சியாக கருத்த வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா

2017 ஆம் ஆண்டு 5 முன்னாள் போராளிகள் பயங்கரவாத தடை பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவருக்கும் எதிராக விசாரணை மேற்கொண்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இந்த ஐந்து கைதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய சதி செய்ததாக புலனாய்வு பிரிவினரால் கிடைக்கப் பெற்ற அறிக்கையின் அடிப்படையில் கைது செய்ததாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் நீதிமன்றில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன

இந்த கைதிகளை பிணையில் விடுதலை செய்ய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.“

இந்தப் பிணை மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பிணை வழங்கும் பொழுது தனது கட்டளையில் இந்த வழக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படாத படியால் பிணை வழங்குவதாக கூறியதுடன் ஒவ்வொரு பிரஜையும் அடிப்படை மனித உரிமையின் படி பிணைக்கு உரித்துடையவர்கள் ஆவார்கள் என கூறி முன்னாள் போராளிகளுக்கு பிணை வழங்கினார்.

அந்த காலத்தில் சுமந்திரனும் நீதிமன்றத்தில் இருந்தார் இதன் பின்னர் இந்த வழக்கு சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு பிணையில் இருந்த முன்னாள்

போராளிகளான கைதிகளின் ரத்து செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

கௌரவ உறுப்பினர் சுமந்திரன் அவர்களே வளமையாக அரசியல் கைதிகள் கைது செய்யப்படும் பொழுது விசாரணையில் சான்றுகள் காணப்படும் பொழுது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழேயே நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

ஆனால் இந்த வழக்கில் மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட போராளிகள் பிணை ரத்து செய்யப்பட்டு வழமைக்கு மாறாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

இப்பொழுது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது சுமந்திரன் தான் பிரதான சாட்சியாளர்.

தற்பொழுது தேர்தலுக்கான திகதி குறிப்பிடப் பட்ட பின்னர் இயக்கச்சியில் ஒரு முன்னாள் போராளி வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கையில் வெடிகுண்டு வெடித்து மரணமானது அடுத்து 15 போராளிகள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதனை அடுத்து திரு சுமந்திரன் அவர்களின் பாதுகாப்புக்கு ஏற்கனவே ஆறு அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்ட நிலையில் மேலும் 10 அதிரடிப்படையினரால் அதிகரிக்கப்பட்டது மொத்தமாக பதினாறு அதிரடிப்படையினரும் 04 பாதுகாப்பாளருடன் இணைத்து மொத்தம் 20 பேர் பாதுகாப்பிற்காக அரசு வழங்கியுள்ளது.

அதேவேளையில் 20 போராளிகள் தடுப்புக்காவலில் உம் சிறையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இவர்களில் கை – கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கு வங்கி வீழ்ச்சிக்கு இந்த செயல்பாடு முக்கிய காரணங்களில் ஒன்றாகும் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் தனது கருத்தினை பதிவு செய்தார் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா.