Oktober 6, 2024

துயர் பகிர்தல் திரு தர்மரட்ணம் எட்வின் அமிர்தராஜா (அருந்தவம்)

திரு தர்மரட்ணம் எட்வின் அமிர்தராஜா (அருந்தவம்)

(Old student of Urumparai Hindu College and Jaffna Central College, An ex- banker- Bank of Ceylon, Business man in Urumpiray)

தர்மரட்ணம் எட்வின் அமிர்தராஜா (அருந்தவம்)

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு, சிலாபம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மரட்ணம் எட்வின் அமிர்தராஜா அவர்கள் 12-08-2020 புதன்கிழமை அன்று லண்டனில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மரட்ணம், றோஸ் நன்னித்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சீவநாயகம், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்டோரின் வர்ணாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
குட்வின் வர்ணன், மெர்வின் அமிர்தன்( அமீர் ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆனந்தி, ஷிரோமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திருமதி றோசாபெல், சாமுவேல் ஆனந்தராஜா(Killi- Sri Lanka), ராணி டெய்சி தங்கமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சபாரத்தினம், சந்திராதேவி, நோயல் Hensman ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
எய்மி, பிரியன், கிரூபன், சாம் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
Goodwin Varnan – Son Mobile : +44 750 511 1262   
Merwin Ameer – Son Mobile : +44 770 353 1785