முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் உள்ள தனது உறவினர்களை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் இருந்து சென்ற இளைஞன் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்களால் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு கடந்த 18 ஆம் திகதி செய்யப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர். சென் ஜூட் இளவாலைப் பகுதியைச் சேர்ந்த செல்வராஜா தனுசன் வயது 25 என்ற இளைஞன் காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞன் மேசன் வேலை செய்து வருகின்றார். கடந்த 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவுக்கு சென்றுள்ளார். மீண்டும் அதே தினம் முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் பேருந்தில் ஏறி அவர் யாழ்ப்பாணம் வந்து சேரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.குறித்த நபரின் கைத்தொலைபேசியின் செயல் இழந்துள்ள நிலையில் காணப்படுவதாக அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை இளவாலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்