Oktober 7, 2024

டொரோண்டோ பிரபல உணவகத்தில் கைகலப்பு – தமிழர் ஒருவர் பலி ,சந்தேகநபர் தேடப்படுகிறார்..!!

இன்று மதியம் 3.20 மணியளவில் ஸ்கார்பரோவில் வார்டன்( Warden ) மற்றும் பின்ச்(Finch) சந்திப்பில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் உள்ளே இடம் பெற்ற கைகலப்பை அடுத்து யாழ்ப்பாணம் கொக்குவில்லை சேர்ந்த கமலக்கண்ணன் என்கின்ற தமிழர் ஒருவர் உயிரிழந்ததாக டொரோண்டோ செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளது.

 

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர், இச் சம்பவத்தோடு தொடர்புபட்ட குற்றவாளியை இனம் காண டொரொன்டோ பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் .