März 28, 2025

மட்டக்களப்பில் காணாமல் போன 4 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகநேரியில் குளத்துமடுவில் காணமல் போயிருந்த குடும்பஸ்த்தரின் சடலத்தினை வாகநேரி ஆற்றுப் பகுதியில் நேற்று மாலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த சனிக்கிழமை (18) மாடு மேய்க்க சென்றவர் வீடு திரும்பாத நிலையில், அவரது உறவினர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று திங்கட்கிழமை மாலை (20) குறித்த நபரின் சடலம் ஊரியன் கட்டு ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குளத்துமடு வாகநேரியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான மு.செல்லத்தம்பி வயது (56) என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மரண விசாரணைகளை கோறளைப்பற்று பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வ.ரமேஸ் ஆனந்தன் மேற்கொண்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.