வடமராட்சி:கிணறு உயிரை பறித்தது!

Old Water WellCredit: Getty
வடமராட்சியில் பட்டம் விடச் சென்ற 08 வயதுச் சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி திக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தன் நிதீஷ்குமார் (வயது 8) எனும் சிறுவனே இன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,பட்டம் விடுவதற்காக தனது சகோதரியுடன் அயல் காணிக்கு குறித்த சிறுவன் சென்றுள்ளார்.
பட்டத்தை ஏற்றியபின்னர் அந்தக் காணியிலிருந்த கிணற்றடியில் நின்று விளையாடிக் கொண்டிருந்த போது நிலை தடுமாறி அவர் கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார்.
சம்பவத்தை அவதானித்த சகோதரி ஓடிச் சென்று உறவினர்களை அழைத்துவந்து குறித்த சிறுவனை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தபோதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.