März 28, 2025

மழைக்கு மத்தியும் காணி பிடிப்பு! மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!

மழைக்கும் மத்தியில் வலி வடக்கு பிரதேசத்தில் காண சுவீகரிப்புக்கு எதிராக மக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இன்று  காலை 09.00 மணியளவில் கீரிமலை ஜே/226,காங்கேசன்துறை மேற்கு,ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணிகளை சிறீலங்காப் படையினருக்கு சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில்  குறித்த எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

மக்கள் எதிர்ப்பால் நில அளவை திணைக்களத்தினர் காணி அளவீடு நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.

இன்றைய காணிப்பு சுவீகரிப்புப் போரட்டத்தில் பராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் காணி உரிமையாளர்கள்  பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.