März 28, 2025

தமிழ்த்தேசிய ஆதரவு மையம். வாட்ஸ்சப் இக்குழுவின் அடிப்படை நோக்கோடு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்!

இன்றைய காலகட்டத்தில் சிங்கள பௌத்த பேரினவாத்த்தால் தமிழ்த் தேசியம் எதிர் நோக்கும் பல நெருக்கடிகள் மற்றும் எமதுமக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிகள்…

போன்ற பல காரணங்களால் சில தனிநபர்களும் சில அமைப்புக்களும் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலிற்க்குள் சென்றுவிடும் அபாய நிலை உருவாகியுள்ளது!!!!

எனவே தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தலைவரையும் மாவீரத்தியாகங்களையும் மனதில் நிறுத்தி.

தேசியம் நோக்கிய பாதையில் தனிநபர்களாகவோ, அன்றி அமைப்புக்கள் ரீதியாகவோ , தேசியத் தலைவரின் சிந்தனைகளயும் கொள்கைகளையும் எந்தவித கறைபடிதலுமின்றி. நகர்திவருபவர்களை இனங்கண்டு அவ்வமைபை அரசியல் ரீதியான போராட்டங்கள் மற்றும் இராஜதந்திரநகர்வுகளையும் ஊக்கப்படுத்துவதோடு,

தாயக மக்களின் வாழ்வாதாரத்தை மையமாக்க் கொண்டு செயற்படும் தொண்டரமைப்புக்களையும் ஊக்கப்படுத்தி உறுதுணையாக நின்று .

எமது தேசியத் தலைவரின் அதி உன்னதவார்தையான இளந்தலைமுறையின் கையில் எமதுவிடுதலை. இதற்க்கமைய இளையோரின் தமிழ்க் கல்வி, மற்றும் நலன்களையும் கவனத்தில் கொண்டு.

இவை போன்ற தேசியக்கொள்கைகளிற்க்கிணங்கவும் அவற்றிற்க்கு செயல்வடிவம் கொடுக்கவும்.

ஒண்றுசேர்ந்து பயணிப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.