März 28, 2025

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் இன்று காலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்( M. A. Sumanthiran), த.சித்தார்த்தன், சி.சிறிதரன்(Sivagnanam Shritharan) உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.