März 28, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு எதிர்க்கட்சி உடந்தையா?

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டது இன்றைய எதிர்க்கட்சியின் ஆட்சிக்காலத்திலாகும். இந்த தாக்குதலில் அவர்களும் உடந்தையா என்ற கேள்வியெழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

எஸ்.வியாழேந்திரன் உட்பட ஐந்து பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்த வழக்கு இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி றிஸ்வான் முன்னிலையில் நடைபெற்றது.

வழக்கினை தொடர்ந்து அவர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

புதிய அரசாங்கம் வந்ததன் பின்னரே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கினை எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் தலைப்பகுதியை மட்டக்களப்பு பொதுமயானத்தில் புதைத்ததற்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் மட்டக்களப்பு தலைமையக காவல்துறையின எஸ்.வியாழேந்திரன் உட்பட ஐந்து பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது