März 31, 2025

அடுத்து மறவர் குளம்!

யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் „தூய அழகிய நகரம்“ திட்டத்தின் தொடர்ச்சியாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதி அனுசரணையுடன் மறவர்குளம் துரித அபிவிருத்தித் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார்.