März 28, 2025

நளினியின் மனுவை தள்ளுபடி செய்க – பதில் மனுத்தாக்கல் செய்தது தமிழக அரசு

ஏழு பேரின் விடுதலை குறித்த தமிழக அரசின் தீர்மானத்துக்கு ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான 2018 தமிழக அரசு தீர்மானத்தின் மீது ஆளுனர் எந்த முடிவும் எடுக்காததால், தம்மை விடுதலை செய்யக்கோரி நளினி இந்த வழக்கை தொடர்ந்தார்.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு அரசு, தண்டனை குறைப்பு தொடர்பாக குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க தகுதியானவர் என கூறி, அது தொடர்பில் ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.