März 28, 2025

ரயர் கொழுத்தியதற்கு கைது!

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியிலுள்ள வீதியில் இன்று (26) வௌ்ளிக்கிழமை டயர் கொளுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தை அறிந்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், டயரை கொளுத்திய இருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். எரிந்துகொண்டிருந்த டயரையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அவ்விருவரையும் தடுத்துவைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மாவீரர் வாரம் அனுஷ்ட்டிக்கப்பட்டு வரும் நிலையிலும் , இன்றைய தினம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் என்பதனாலும் , வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புகள் , கண்காணிப்புகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.