März 28, 2025

டக்ளஸ் தேவானந்தாவுக்கு சபையில் வைத்து பதிலடி கொடுத்த சிறீதரன்..!!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சபையில் வைத்து பதிலடி கொடுத்த சிறீதரன்..!!

என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் (S.Sreedharan) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று சிறிதரன் உரையாற்றும்போது அவருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் (Douglas Devananda) இடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் சிறிதரனின் உரையை குறுக்கீடு செய்த டக்ளஸ்,

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ளீர்கள்.

அதற்கு முன்னரும் நாம் செய்திருப்போம். ஆனால், நீங்கள் செய்யவிடவில்லை. பிரபாகரன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார். இது உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அல்லது நீங்கள் மறைக்கலாம் என கூறியுள்ளார்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே பதவிகளுக்காகக் கால் கழுவிப் பிழைப்பதற்காகத் தான் அரசியல் நடத்தவில்லை என சிறீதரன் தெரிவித்துள்ளார்