März 28, 2025

ஜங்கரநேசனிற்கு குவியும் பாராட்டு!

இந்திய கடற்படையால் சுற்றிவளைக்கப்பட்டு கொல்லப்பட்ட கேணல் கிட்டு ஞாபகார்த்த பூங்காவிற்கு இந்தியத் துணைத்தூதர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை அழைத்துவந்து அவரிற்கு காந்தள் மலர் அணிவித்து சாதனை புரிந்துள்ளார் முன்னாள் வடமாகாண அமைச்சர் பொ.ஜங்கரநேசன்.

அவரது நடவடிக்கைக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நல்லூர் கிட்டு பூங்காவில் கார்த்திகை வாசம் என்ற பெயரில் ‘மலர் முற்றம்’ என்ற காட்சித் திடலை இன்று சனிக்கிழமை (20.11.2021) திறந்து வைத்துள்ளது.

இம்மலர் முற்றத்தை இந்தியத் துணைத்தூதர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்கள் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.

ஆவரிற்கும் அவருடன் வருகை தந்திருந்த இந்திய அதிகாரிகளிற்குமே காந்தள் மலர் அணிவித்து அதிரடி காண்பித்துள்ளார் பொ.ஜங்கரநேசன்.