März 28, 2025

கத்திக் குத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பலி

பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமஸ் ( வயது 69)கிழக்கு இங்கிலாந்தில் உள்ள தேவாலயத்தில் தனது தொகுதி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது பல முறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழநாதுள்ளார்.

25 வயதான  சோமாலிய அடியைச் சேர்ந்த பிரித்தானிரான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் தற்போது லண்டன் பகுதியில் உள்ள இரண்டு முகவரிகளில் சோதனைகளை காவலதுறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கத்திக்குத்து சம்பவம் இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய சாத்தியமான உந்துதல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.