März 28, 2025

டக்ளஸ உடன் கைகோர்க்க தயார் – செல்வம்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது மீனவர்களை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கையில் இறங்க வேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அதற்கான நடவடிக்கைளை அவர் எடுக்கும் போது, அவருடன் சேர்ந்து செயற்பட தயாராக இருக்கிறோம் எனவும் கூறினார்.

அத்துடன், இந்திய இழுவைப் படகுகாளால் பாதிக்கப்பட்ட தமது மீனவர்களுக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும், அவர் வலியுத்தினார்.

மன்னாரில், இன்று (14) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.