März 28, 2025

மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள் யாழில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் தங்கச் சந்தை நிலவரப்படி  தங்கத்தின் விலையில் சரிவு கண்டுள்ளது என தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு விலை குறைவைக் கண்டுள்ளது.

அதன்படி இன்றைய நிலவரப்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 17ஆயிரத்து 500ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 23ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டிருந்தது.

மேலும் 22 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 7ஆயிரத்து 700ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது என சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இன்னும் சில நாள்கள் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படும் என தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.