März 28, 2025

ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சருக்கு பதிலடி கொடுத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

ஜனாதிபதியினதும் நீதி அமைச்சரினதும் அறிவிப்பை அடியோடு நிராகரிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணை மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதோடு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான, மாறாத நிலைப்பாடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் நீதி அமைச்சர் மொஹமட் அலி சாப்ரி கூறிய விடயங்ளுக்கு கருத்துத் தெரிவித்து  அவர் தனது உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் இந்த விடயத்தினைப் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அந்தப் பதிவில்,

உள்ளக விசாரணையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிராகரித்தமை மிகச்சரியான முடிவென்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

அரசினதும் சிங்களக் கட்சிகளினதும் உண்மை முகத்தை இப்போதாவாது புரிந்து, அவர்களோடு சேர்ந்து வரலாற்றுத் துரோகங்களைப் புரிபவர்கள் தயவுசெய்து சரியான தடத்திற்குத் திரும்புங்கள்.

இல்லையேல் தமிழினத்தை ஆழித்தவர்களுக்குத் துணைபோனவர்கள் பட்டியலில் நிச்சயம் நீங்களும் வரலாற்றில் இடம்பெறுவீர்கள் எனவும் அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.