März 28, 2025

பதுக்கிய 4,100 தொன் சீனி! களஞ்சியசாலைக்குக்குப் பூட்டு!!

வத்தளை கெரவலப்பிட்டிய பகுதியில்வைக்கப்பட்டிருந்த 4,100 மெற்றிக் தொன் சீனியை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.நுகர்வோர் விவகார அதிகார சபையால் இன்று (30) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சீனி பதுக்கிய களஞ்சியசாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த களஞ்சியசாலை சட்டவிரோதமானது இல்லை என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களை நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு சமர்ப்பிக்குமாறு களஞ்சிய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களை பரிசோதிக்கும் வரை சீனி இருப்பு குறித்து எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் உள்ள சீனி களஞ்சியசாலைகள் தொடர்ந்து சோதனை செய்யப்படும் என்றும் எந்த சந்தர்ப்பத்திலும் நுகர்வோருக்கு நீதி வழங்க வேண்டிய கடமையிலிருந்து விலகமாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.