März 28, 2025

ஆஸ்திரேலியாவில் ஆப்கானியர்கள் நிரந்தரமாக வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள்: பிரதமர் ஸ்காட் மாரிசன்

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்து தற்போது தற்காலிக பாதுகாப்பு விசாக்களில் உள்ள எவருக்கும் நிரந்தரமாக வசிப்பதற்கான உரிமை வழங்கப்படாது என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்திருக்கிறார்.“இந்த விவகாரத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு கொள்கைகள் எதுவும் மாறவில்லை என்ற தெளிவான செய்தியை ஆட்கடத்தல்காரர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்,” என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலிய அரசு வட்டார தகவல்கள் படி,  தற்காலிக பாதுகாப்பு விசாக்கள் கீழ் 4,500 ஆப்கானியர்கள் ஆஸ்திரேலியாவில் தற்போது வசித்து வருகின்றனர்.