Mai 17, 2024

இலங்கைக்கு அவசரமாக ஒட்சிசன் மற்றும் சீனி இறக்குமதி!

சீனிக்கு ஏற்பட்டுள்ள பெரும் பற்றாக்குறையினையடுத்து இலங்கைக்கு தற்போது கடன் அடிப்படையில் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.180 நாட்களில் செலுத்தும் இணக்கப்பாட்டிற்கு அமைய கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான தொகை சந்தர்ப்பத்தில் டொலர் பெறுமதிக்கு அமைய செலுத்தப்பட வேண்டும். டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதோடு சீனியின் விலை அதிகரித்து காணப்படுகின்றதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால், அவர்களுக்கு தேவையான ஒக்சிஜனை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.மலேசியா மற்றும் இந்தியாவிலிருந்து ஒக்சிஜன் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் முதலாவது கட்டமாக 20 மெட்ரிக் தொன் ஒக்சிஜன் அடங்கிய 6 கொள்கலன்களை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இரண்டு உள்நாட்டு உற்பத்தியாளர்கள் நாட்டிற்கான ஒக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.