März 28, 2025

யாழ் குடாநாட்டை அச்சுறுத்திய நபர் கைது.

யாழ்ப்பாணம் – அளவெட்டி, நாகினாவத்தை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் நேற்று முன்தினம் (09) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2 வாள்கள் மற்றும் சந்தேக நபரால் கொள்ளையிடப்பட்ட இலக்க தகடற்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.