März 28, 2025

குளவிக்கொட்டு கிளிநொச்சியில் ஒருவர் பலி!!

கிளிநொச்சி தருமபுரம் குமாரசாமிபுரம் பகுதில் தேன்குளவி கொத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (08) மாலை 6.30 மணியலவில் இடம்பெற்றுள்ளது.

தேன் எடுத்துக் கொண்டிருக்கையில் பல தேன்குளவி கொத்திய நிலையில் தருமபுரம் வைத்தியசாலைக்கு நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 64 வயதுடைய கதிரேசு செல்வரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாணைகளை ஆரம்பித்துள்ளனர்.