März 28, 2025

வல்வெட்டித்துறை நகரசபை தலைவருக்கும் கொரோனா!

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார்  கோயில் தீர்த்த திருவிழாவில் பக்தர்கள் திரண்டமை தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, கோயிலின்  அறங்காவலர்கள் ஜவர் கைதாகியுள்ளனர். அவர்கள் இன்று நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

செல்வச் சந்நிதி ஆலயத்தில் உணவகத்தில் பணிபுரியும் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்றே வல்வெட்டித்துறை நகரசபை தலைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செல்வச்சந்நிதி ஆலயத்துடன் தொடர்புடையவர்களுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வல்வெட்டித்துறை நகரசபை தலைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.