April 3, 2025

கறுப்பு ஜூலை :நினைவுகூர தடை!

கறுப்பு ஜூலை படுகொலையை நினைவுகூர தடை உத்தரவு வழங்கி மூதூர் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இலங்கை காவல்துறையால் நீதிமன்றத்தில் முன்வைத்த விண்ணப்பத்தை ஆராய்ந்து தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தலை நடத்த ஒரு தரப்பினர் தயாராகி வருவதாக காவல்துறை மன்றுக்கு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து வெருகல் பிரதேச சபையின் துணைத் தலைவர் தேவநாயகம் சங்கர், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட செயலாளர் கணேசப்பிள்ளை குகன் உள்ளிட்டோருக்கு தடை உத்தரவு கட்டளை வழங்கப்பட்டள்ளது.