März 31, 2025

ரோல்ஸ் ராய்ஸ் கார் தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்

நடிகர் விஜய் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு இறக்குமதி வரி விதிக்க தடை கோரிய வழக்கில் 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது.

நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். நிஜ வாழ்வில் ரீல் ஹீரோவாக இருக்க கூடாது. வரி செலுத்துவது நன்கொடை கொடுப்பது போன்றது அல்ல. ஒவ்வொரு குடிமகனின் கடமை.

நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்று கொள்ள முடியாது. இவ்வாறு நீதிபதி எஸ். எம். சுப்பிரமணியம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.