März 28, 2025

நவாலி படுகொலை நினைவேந்தல்- குவிக்கப்பட்ட பொலிஸார்

நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி விமான படையினர் வீசிய குண்டு வீச்சில் இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 147க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் மலரஞ்லி செலுத்தி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், தேவாலய வளாகத்தினுள் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.