März 28, 2025

வடகிழக்கிலிருந்த குழுக்கள் மீண்டும் தொழிலில்!

வடகிழக்கில் மீண்டும் இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்கள் முடுக்கவிடப்பட்டள்ளன.கடந்த காலங்களில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட இலங்கை படைகளின் புலனாய்வு பிரிவை சேர்ந்த பலரையும் மக்கள் பின்னர் நியமிக்கபட்ட ஆணைக்குழுவில் அடையாளப்படுத்தியிருந்தனர்.இதன் தொடர்ச்சியாக புலனாய்வாளர்களை மைத்திரி அரசு இடமாற்றம் செய்திருந்தது.

இந்நிலையில் அக்குழுக்கள் கடத்தல்களை தெற்கிற்கும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

புத்தளம்  நுரைச்சோலைப் பிரதேசத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு, இடைநடுவில் கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில், இராணுவ கப்டன் ஒருவர் உள்ளிட்ட 4 இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என, ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இராணுவ வீர்ர்கள் நால்வரும் கல்லாறு இராணுவ முகாமுக்கு இணைவாக கடமையாற்றுபவர்கள் என்றும், இவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.