März 29, 2025

இந்தியாவின் வேண்டுகோளை நிராகரித்த ஸ்ரீலங்கா

அமெரிக்க – இந்திய விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளவுள்ள வான்படை பயிற்சி ஒன்றுக்காக ஸ்ரீலங்காவின் வான்பரப்பை பயன்படுத்த அனுமதிக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது.

இந்திய விமானப்படை தளபதியினூடாக விடுக்கப்பட்ட இந்த வேண்டுகோளை பரிசீலித்த ஸ்ரீலங்கா விமானப்படை அதற்கு அனுமதியை வழங்கமுடியாதென பதிலளித்துள்ளது.

இரு நாட்டு படைகளின் ஒத்துழைப்புகளை மேம்படுத்த கடல் மற்றும் வான் பரப்பு பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.