März 29, 2025

24 தலீபான்கள் சுட்டுப் படுகொலை!

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கே அமைந்த குண்டூஸ் மாகாணத்தின் குண்டூஸ் நகரில், காபூல் நகரில் இருந்து 250 கி.மீ. வடக்கே சே தரக், இனாயத் மற்றும் ஜகீல் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், படையினருக்கும், தலீபான்களுக்கும்  இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 24 தலீபான்கள்  சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். 15 பேர் காயமடைந்து உள்ளனர்.