März 28, 2025

2009 இன் பின் குடும்பத்துடன் இணைந்த தமிழ் அரசியல் கைதி

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் இவரும் ஒருவர் என தகவல் வெளியாகியுள்ளது.

இவர் பயங்கரவாத தடுப்பு தடைச்சட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார் என தெரியவருகிறது.