März 30, 2025

வவுனியாவில் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்!

வவுனியா சாந்தசோலை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதார பரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சுகாதார பரிசோதகர் நேற்றையதினம் மாலை சாந்தசோலை பகுதியில் கடமை நிமிர்த்தம் சென்றிருந்தார்.

இதன்போது முகக்கவசத்தை சீரான முறையில் அணியாமல் வீதியால் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது அதனை சீராக அணியுமாறு சுகாதார பரிசோதகர் எச்சரித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த இளைஞர் சுகாதார பரிசோதகரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவித்து சுகாதார பரிசோதகர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.