März 29, 2025

மட்டக்களப்பில் சிறைச்சாலை அதிகாரி பலி!

மட்டக்களப்பு சிறைச்சாலை சிரேஸ்ட அதிகாரி இராஜசேகரம் இன்று காலை கொரோனா தொற்றினால் காலமாகியுள்ளார்.

கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே நேற்று முன்தினம் மட்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 05 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்

கொரோனா வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் 84 வயதுடைய பெண் ஒருவர், ஏறாவூர் பிரதேசத்தில் 58 ,67 வயதுடைய பெண் இருவரும் , வாழைச்சேனையில் 36 வயதுடைய கர்ப்பிணி ஒருவரும், வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியில் 81 வயதுடைய ஆண் ஒருவர் உட்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.