März 28, 2025

மனைவி மீது வாள் வெட்டு:கணவன்,மாமன் கைது!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மூங்கிலாற்று பகுதியில், நேற்று (29) இரவு, மனைவி மீது கணவன் மற்றும் மாமனார் வாள்வெட்டு மேற்கொண்டதில், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயும், வாள்வெட்டைத் தடுக்கச் சென்ற 24 வயதுடைய உறவினரான இளைஞன் ஒருவருமே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதன் விளைவாகவே, இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தை அடுத்து, சந்தேகநபரை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.