März 28, 2025

பழிவாங்க முன்னாள் போராளி கைது!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பிரதேசத்தில் முன்னாள் போராளி ஒருவர் இலங்கை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டில் இராணுவச் சிப்பாய் ஒருவரை தாக்கியதாக போராளி ஒருவரை கைது செய்ய படையினர் தேடுதல் நடத்திவந்திருந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாகி இருந்து பின்னர் நீதிமன்றில் சரணடைந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளியே அவரது மீன்வாடியில் வைத்து இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

படை தரப்பின் அழுத்தங்களையடுத்து முன்னாள் போராளியை கைது செய்ய போலி குற்றச்சாட்டுக்களை காவல்துறை முன்வைத்திருந்த நிலையில் அதனை அம்பலப்படுத்தி நீதிமன்று முன்னாள் போராளியை கடந்த ஆண்டு விடுவித்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் இலக்கு வைக்கப்பட்டு முன்னாள் போராளி கைதாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.