März 28, 2025

திருமலை:தமிழ் மீனவர்களை காணோம்!

 

திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் இருந்து நேற்று கடலுக்கு படகில் சென்ற மூன்று மீனவர்கள் இன்னமும் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜேந்திரன் சஞ்சீவன், ஜீவரெட்ணம் சரன்ராஜ், சிவசுப்ரமணியம் நதுசன் என்பவர்களே படகில் சென்றவர்களாவர்.

இவர்களைத் தேடி பல படகுகள் ஆழ்கடலுக்கு சென்றும் இவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.