März 28, 2025

விடுமுறை வழங்கவில்லையாம்:பணிப்பாளருக்கு அடி!

கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அவர் தலையில் காயமடைந்திருப்பதாக தெரியவருகிறது.

ஆசிரியை ஒருவருக்கு விடுமுறை வழங்க மறுத்த சம்பவம் தொடர்பிலேயே அவர் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.