März 28, 2025

ஒரு நாள் முன்பாகவே சுடரேற்றிய சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் நினைவேந்தலை COVID 19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் எனவும் பயங்கரவாத

நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் கவனத்தில் கொண்டு நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும் என திருத்திய  கட்டளையை வெளியிட்டு முல்லைத்தீவு நீதிமன்றம் சற்றுமுன்னர்  தீர்ப்பை வழங்கியுள்ளது.இந்த வழக்கின் மீதான ஒரு தெளிவான திருத்திய கட்டளை வழங்கப்படும் என மன்று தெரிவித்துள்ளது.

இதனிடையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிஙகம் ஒரு நாள் முன்னதாக இன்றே முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி அஞ்சலித்துள்ளார்.