März 28, 2025

இஸ்ரேல் நோக்கி 1000க்கும் மேற்பட்ட உந்துகணைத் தாக்குதலைத் தொடுத்த கமாஸ்

காசா பகுதியில் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இடையில் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.  இத்தாக்குதல்கள் முழு அளவிலான போரை நோக்கி நகர்கின்றனவா என அஞ்சுகிறது ஐக்கிய நாடுகள் சபை. ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ், நடந்துகொண்டிருக்கும் வன்முறைகளால் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன் என்றார்.

கடந்த 38 மணி நேரத்திற்கும் மேலாக 1,000 க்கும் மேற்பட்ட உந்துகணைகள் பாலஸ்தீனிய போராளிகளால் இஸ்ரேல் நகரங்கள் நோக்கி ஏவப்பட்டன. பெருமளவான உந்துகணைகள் தரைநகர் டெல் அவி நகரை நோக்கி ஏவப்பட்டன.

நேற்று செவ்வாயன்று காசாவில் இரண்டு கோபுரத் தொகுதிகளை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மூலம் தகர்த்தி வீழ்த்தியது.

டெல் அவிவ் அருகே உள்ள லாட் நகரம் அவசரகால நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஆறு இஸ்ரேலியர்கள் இறந்துள்ளனர், காசாவில் திங்கள்கிழமை முதல் 13 குழந்தைகள் உட்பட 43 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.