Mai 14, 2024

தலைவர் புகழ்பாடிய ரகோத்தமன் கொரோனாவால் மரணம்!

தம்பி பிரபா போன்று ஒரு மாவீரன் இந்த மண்ணில் பிறந்ததுமில்லை இனி பிறக்கப்போவதுமில்லையென புகழ்பாடிய முன்னாள் சி பி ஐ புலனாய்வு அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இன்று நேற்றல்ல தென் இந்தியர்களின் மீதான வட இந்தியர்கள் வன்மம் என்பது காலங்கமாக அவர்களின் மரபணு வழியாகவே கடந்து வந்து கொண்டிருக்கிறது.

வட இந்தியர்களுக்கு  இயல்பாகவே தென் இந்தியர்கள் மீது ஒரு வெறுப்பு உணர்வு இருக்கிறது என்பதை தான் சந்தித்த ஒரு சம்பவத்தின் மூலம் பகிர்ந்து கொண்டார் ரகோத்தமன்.

ஐ பி எஸ் தேர்வு பெற்று 1969 ஆம் ஆண்டு டோராடூனில் உள்ள ஐ பி எஸ் பயிற்சி அக்கடமியில் பயிற்சியில் இருந்தாராம் ரகோத்தமன்.

தமிழ் நாட்டின் முதல்வரான  அண்ணா நோய்வாய்பட்டிருந்த நேரம் அது.

ஒருநாள் மாலை நேரம் அங்குள்ள உணவுக்கூடம் பகுதியிலிருந்து பட்டாசு வெடிக்கும் ஓசையும் பலத்த ஆரவாரங்களும் கேட்க ரகோத்தமன் அங்கு ஓடிப் போனாராம்.

அப்போது அங்கு இருந்த வட இந்திய பயிற்சி ஐ பி எஸ் அதிகாரிகள் பட்டாசு வெடித்ததோடு, அங்கிருந்தவர்களுக்கு லட்டு கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டிருந்தார்களாம்.

ரகோத்தமன் என்ன காரணம் என்று கேட்க ‚ தமிழக முதலமைச்சர் அண்ணாத்துரை மரணமடைந்து விட்டாராம்…‘ என்று  சொல்லியிருக்கிறார்கள்.

இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த ரகோத்தமன் அங்கிருந்த தமிழகத்தை சேர்ந்த பயிற்சி அதிகாரி ஒருவரையும் உடன் அழைத்துக் கொண்டு அப்போது அந்த பயிற்சி மையத்தின் அதிகாரியாக இருந்த தமிழ் அதிகாரி ஒருவரிடம் ‚என்ன இருந்தாலும் அண்ணா தமிழகத்தின் முதலமைச்சர்.. அவரது இறப்பை ஐ பி எஸ் டிரயினிங் அக்கடமியில் பட்டாசு வெடித்து கொண்டாடுவது சரியில்லை..‘ என்று முறையிட்டாராம்.

அதற்கு அந்த அதிகாரி ‚இதுதான் இங்கு காலங்காலமாக நடக்கிறது.. இது பற்றி நீ ஏதும் கேட்டால் உன்னை இங்கு பயிற்சியில் தொடர விட மாட்டார்கள்..  கண்டுக்காமல் போ நாங்களும் இப்படித்தான் இருக்கிறோம்..‘ என்று சொல்லிவிட்டாராம்.இதை வேதனையோடு பகிர்ந்து கொண்டவர் ரகோத்தமன்.

தனது மரணம் வரை தமிழ் தேசியத்தை நேசித்த தலைவர் பிரபாகரனை மனதார வாழ்த்திய ரகோத்தமன் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

You may have missed