März 28, 2025

35 மணி நேரம் இடைவிடா பரதம் ஆடி சாதனை!

 

35 மாணவிகளைக் கொண்டு 35 மணி நேரம் இடைவிடாமல் பரதம் ஆடி, ஆசியச் சாதனை புத்தகத்திலும் மலேசியச் சாதனை புத்தகத்திலும் அவர் இடம் பிடித்துள்ளார் மலேசியாவைச் சேர்ந்த ஆசிரியர் நளினி.மலேசியாவில் உள்ள ஸ்ரீ ராதாகிருஷ்ணன் இசை கலைக்கூடத்தைச் சார்ந்த 35 மாணவிகள், இடைவெளியின்றி பாரம்பரிய நடனமாடி மலேசியச் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

அத்தோடு அதிகப் பெண்கள் எண்ணிக்கையைக் கொண்ட 24 மணி நேர இடைவிடாத பரத அரங்கேற்றத்திற்காகவும் அவர்கள் ஆசிய, மலேசியச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.