März 28, 2025

தமிழ்நாட்டிற்கும் வந்தது ஒட்சிசன் பற்றாக்குறை!

இந்தியாவின் வடமாநிலங்களை தொடர்ந்து தமிழகமும் ஒட்சிசன் பற்றாக்குறை மரணங்களை சந்திக்க தொடங்கியுள்ளது.

தமிழ் நாட்டின் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 10 மணி முதல் ஒக்சிசன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஒக்சிசன்  கிடைக்காமல் இங்குள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 9 கொரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒக்சிசன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.