März 28, 2025

தமிழர் தாயகமெங்கும் அன்னை பூபதி! டாம்போ April 19, 2021  யாழ்ப்பாணம்

தடை தாண்டி வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் அன்னை பூபதியி;ன் நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் சமாதியில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதேவேளை வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அன்னைபூபதி நினைவேந்தப்பட்டார்.

இதே போன்று கிளிநொச்சியில் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களும் நினைவேந்தலை முன்னெடுத்திருந்தன.

இதனிடையே  உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து உயிர் நீத்த அன்னை பூபதிக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அன்னை பூபதியின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், பல்கலைக்கழகத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.