März 28, 2025

அவசரசிகிச்சைப் பிரிவில் மன்மோகன் சிங்!

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை அதி வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் நாள்தோறும் கொரோனா பாதிப்புகளின் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சில நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி வருகிறது. இதை தொடர்ந்து, பல அரசியல் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல் நிலை மோசமாக இருப்பதால் மருத்துவர்கள் உயர்தர சிகிச்சை அளித்து வருகின்றனர்.