März 29, 2025

அன்னை பூபதிக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி!

இரண்டு அம்ச கோரிக்கையை முன் வைத்து, சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து உயிர் நீத்த அன்னை பூபதிக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.அன்னை பூபதியின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், பல்கலைக்கழகத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அதன் போது மாணவர்கள் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி,சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.