März 29, 2025

ஆண்டுத்துவசநாள் பூபதி சுப்பிரமணியம் அவர்களின் 8 வது ஆண்டுத்துவசநாள்19.04.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரை வதிவிடமாகவும் வாழ்ந்த பூபதி சுப்பிரமணியம் அவர்களின் ஆண்டுத்துவசநாள்

 தாயே!

இனிய மொழி பேசி பிறர்க்கு உதவினாய்!

இணைந்து நின்று எம்மை மகிழ்வித்தாய்!

பாசத்தால் எல்லோரையும் அரவணைத்தாய்!

பண்புடன் வாழக் கற்றுக் கொடுத்தாய்!

உற்றார்கள் கண்களையே ஊற்றுநீர் ஆக்கியிங்கு

உள்ளன்பு நெஞ்சங்களை உளமுருக வைத்து விட்டு

பாசமுடன் பழகியவர்கள் பரிதவித்துக் காத்திருக்க

பகவானின் பாதமலர் முத்தமிடச் சென்றாயே!

எங்கே சென்றாய் தாயே? – எமை விட்டு

எங்கே சென்றாய் தாயே?

மனித வாழ்வை விடுத்தாய் அம்மா!

சிவபத பெருவாழ்வு வாழ்வாய் அம்மா!

அன்புத் தாயே! உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.